கால்பந்து Goal Keeper ஆக இருந்தவர் இன்று சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்!

 

கலாநிதி அஷ்ஷைக் உஸ்மான் அல் கமீஸ் என்று அரபுலகில் பிரசித்திபெற்றுள்ள ஷைக், ஒரு காலத்தில் கால்பந்து வீரராக இருந்திருக்கிறார் என்றால் அதிசயமாகத் தான் உள்ளது.

இவர் குவைத் நாட்டில் தமீமீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மே 26, 1962 ஆம் ஆண்டு குவைத்தில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை தனது நாட்டில் கற்றுவிட்டு மேற்படிப்பை சவூதி அரேபியாவின் தலைநகரிலுள்ள இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் மற்றும் மலிக் ஸுஊத் பல்கலைக்கழகங்களிலும் கற்றார்.

இவர் ஹதீஸ் துறையில் முதுமாணி, கலாநிதி கற்கைகளை கற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இப்னு பாஸ், இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் ஆகிய மாபெரும் அறிஞர்களின் மாணவராவார்.

தற்போது இமாமாகவும், இஸ்லாமிய சொற்பொழிவாளராகவும், பல் துறை மாநாடுகள், செயலமர்வுகளின் விரிரையாளராகவும், குவைத் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் விளங்குவதோடு இவர் ஓர் இஸ்லாமிய சட்டத்துறை அறிஞரும் ஹதீஸ் துறை நிபுணருமாவார்.

இவர் பன்னூல் ஆசிரியர் மட்டுமல்லாது, ஸஹாபாக்கள் பற்றி மக்கள் மன்றத்தில் பேசி, ஷீஆக்களுக்கெதிரான பிரச்சாரங்கள், வாதாட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வரும் வீரராக திகழ்வதால் அதிகம் மக்களிடையே பிரசித்தி பெற்றுள்ளார். இதனால் இவரை மக்கள் “أسد السنة” ஸுன்னாவை பாதுகாக்கும் சிங்கம் என்று அழைக்கின்றனர்.

அல்லாஹ் ஷைக் உஸ்மான் அல்கமீஸ் அவர்களது சேவைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை மீஸானை நன்மைகளால் கனமாக்குவானாக!

தகவல்: Wikipedia
தொகுப்பு: Azhan Haneefa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *