உலக உறக்கத் தினத்தன்று ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்கிய நிறுவனம்

 

உலக உறக்கத் தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்கிய நிறுவனம் தொடர்பில் உலகின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வேலை காரணமாக சிலருக்குப் போதிய உறக்கம் கிடைக்காமல் போயுள்ளது.

இது சிலருக்குப் பழகிப்போயிருந்தாலும் இந்தியாவில் கர்நாடகாவிலுள்ள நிறுவனம் ஒன்று அந்த வழக்கத்தை மாற்ற முற்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் Wakefit Solutions. இந்த நிறுவனம் மெத்தை, தலையணை, போர்வை முதலியவற்றை விற்பனை செய்கிறது.

கடந்த மார்ச் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக உறக்கத் தினத்தைக் கொண்டாடிய நிறுவனம் அன்றைய தினம் ஊழியர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

உறக்கம் தொடர்பான பொருள்களை விற்கும் நிறுவனம் என்பதால் உறக்கத் தினத்தைத் தாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டமாகக் கருதுவதாகவும் நிறுவனம் LinkedIn பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *