நிமிடத்திற்கு 5 லட்சம் கொடுங்க மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்!

 

சோகைல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ஹன்சிகா மோத்வானியின் தாய் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பாலிவுட் படமான ‘ஹவா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

ஹன்சிகாவின் 50-வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி தனது நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா.

அங்கு நடிகை என்பதை மறந்து சாதாரண குடும்ப தலைவியாக மாறி வீட்டு வேலைகளை செய்து வருகிறார். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி வெளியாகி வருகிறது. ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முடிவுகள் என தொடங்கி பல ரகசியங்கள் குறித்து பேசினர்.

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, மணமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹன்சிகா தாயார் மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன். அது என்னவென்றால், இன்று நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *