காதல் தோல்வியை லாபமாக மாற்றிய வாலிபர்!

காதலி ஏமாற்றிவிட்டதால் தனக்கு 25,000 ரூபாய் காப்பீட்டு தொகையாக கிடைத்ததாக இளைஞர் ஒருவர், தனது காதல் தோல்வியின் மூலம் லாபம் பார்த்த கதையை கூறி ஆச்சரியபடுத்தியுள்ளார்.

ஏமாற்றிய காதலி

ட்விட்டரில், பிரதீக் ஆர்யன் (Prateek Aaryan) எனும் இளைஞன் தனது காதல் முறிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். காதலியை பிரிந்த பிறகு தனக்கு ரூ.25,000 கிடைத்ததாக கூறியுள்ளார்.

தனது காதலி முதலில் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தான் ‘காதல்முறிவு காப்பீட்டு நிதி’யின் கீழ் இந்தத் தொகையைப் பெற்றதாகவும் அந்த பிரதீக் கூறியுள்ளார்.ஙங

ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்
“எங்கள் உறவு தொடங்கியதும், நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டுக் கணக்கில் 500 ரூபாய் டெபாசிட் செய்ய ஆரம்பித்தோம், மேலும் யார் ஏமாற்றப்பட்டாலும் முழு பணத்தையும் எடுத்துக்கொள்வார்கள் என்று விதியை உருவாக்கினோம். அதற்கு ‘ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்’ (Heartbreak Insurance Fund) என்று பெயரிட்டோம்” என்று பிரதீக் தனது ட்விட்டரில் எழுதினார்.

பிரதீக்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானது. 8 லட்சத்துக்கும் அதிகமானோர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *