உலகத்தை ஆட்டம் காண வைக்கவுள்ள ChatGPT

 

தொழில்நுட்ப துறையை ஆட்டம் காண வைக்கவுள்ள ChatGPT தொடர்பில் தொழில்நுட்ப நிபுணர்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தற்போது, ChatGPT மற்றும் பிற GPT-3.5 ஆகியவை இயங்கும் தொழில்நுட்பங்கள் உரை அடிப்படையிலான பதில்களை மட்டுமே வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மல்டிமாடல் திறன்களைத் தவிர, யூசர்கள் உருவாக்கிய கேள்விகளுக்கு மெதுவாகப் பதிலளிக்கும் ChatGPT-யின் சிக்கலைத் தீர்ப்பதில் GPT-4 வெற்றிகரமாக இருக்கலாம்.

சாட்போட் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, பெரிய மொழி மாதிரியின் (எல்எல்எம்) நான்காவது தலைமுறையான ஜிபிடி 4-ஐ அடுத்த வாரம் வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் ஆதரவுடன் ஓபன் GPT-4, மல்டிமாடலிட்டி, வீடியோ செயலாக்கம் மற்றும் எளிய உரைத் தூண்டுதல்களிலிருந்து AI-உருவாக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்கும் திறன் போன்ற புதிய அம்சங்களை கொண்டிருக்கும்.

தற்போது, ChatGPT மற்றும் பிற GPT-3.5 ஆகியவை இயங்கும் தொழில்நுட்பங்கள் உரை அடிப்படையிலான பதில்களை மட்டுமே வழங்க முடியும். ஜெர்மன் செய்தி இணையதளமான Heise வெளியிட்டிருக்கும் தகவலின்படி, தற்போது ChatGPT-ஐ இயக்கும் GPT-3.5-ஐ விட இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

GPT-4 மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் செயல்படும் திறனை உள்ளடக்கும் என்று தெரிவிக்கிறது. Heise-க்கு அளித்த பேட்டியில், மைக்ரோசாப்ட் ஜெர்மனியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) Andreas Braun, அடுத்த வாரம் GPT-4 ஐ அறிமுகப்படுத்துவோம் … எங்களிடம் முற்றிலும் மாறுபட்ட சாத்தியக்கூறுகளை வழங்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது ஏஐ மூலம் வீடியோக்களை உருவாக்கும் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *