உலகின் முதல் ஊர்வன உணவகம்!

 

உலகெங்கும் செல்லப்பிராணிகளைக் கொண்டுவரக்கூடிய உணவகங்களைப் பற்றி நாம் கேட்டிருப்போம்…

பெரும்பாலும் நாய்கள், பூனைகள் ஆகியவற்றை இந்த உணவகங்களில் காணலாம்.
விளம்பரம்

மலேசியாவின் கோலாலம்பூரில் (Kuala Lumpur) உலகின் முதல் ஊர்வன உணவகம் உள்ளதாக NDTV தெரிவித்தது.

Fangs By Dekõri எனும் அது ஊர்வன ஆர்வலர் யாப் மிங் யாங்கால் (Yap Ming Yang) நிறுவப்பட்டது.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பூனைகள், நாய்களை மதிப்பதைப்போல் பாம்புகள், பல்லிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறார் திரு. யாப்.

உணவகத்தின் சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் காணொளிகளில் கண்ணாடித் தொட்டிகளில் பலவகையான விலங்குகள் இருப்பதைக் காணலாம் என்று NDTV தெரிவித்தது..

Corn snakes, leopard geckos, bearded dragons உள்ளிட்ட அவை, மலேசியாவில் அடிக்கடி காணப்படுவதாகக் கூறினார் திரு. யாப்.
விளம்பரம்

அங்கு வரும் பெரியவர்களும் சிறுவர்களும் ஊர்ந்துசெல்லும் விலங்குகளைச் செல்லமாகப் பிடித்துத் தடவியவாறே உணவை வாங்குகின்றனர்.

ஊர்ந்துசெல்லும் விலங்குகள் மிக சுவாரசியமானவை. அவற்றை மக்களுக்குக் காட்டி, அவ்வகை விலங்குகள் மீது அன்பு செலுத்தும்படி ஊக்குவிக்க நான் முயல்கிறேன்” என்று திரு. யாப் Reutersஇடம் கூறினார்.

அவர் மலேசியாவில் ஊர்வன ஆய்வில் (herpetology)ஆர்வமுள்ள குழுவைச் சேர்ந்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *