காதலர் தினத்தை திட்டமிட வேண்டாம் என நாசா எச்சரிக்கை!

2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசா எச்சரித்துள்ளது.

2023 DW என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் பிப்ரவரி 14 அன்று மாலை 4:44 மணிக்கு தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும், ஆனால் அது எங்கு விழும் என்பது இன்னும் தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

கணிக்கப்பட்ட தாக்க மண்டலங்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் மேற்கிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

165-அடி 2023 DW நமது பூமி மீது மோதுவது 114 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் மோதிய துங்குஸ்கா 12-மெகாடன் நிகழ்வோடு ஒப்பிடத்தக்கது.

இந்த 160-அடி சிறுகோள் ஒரு அணு வெடிப்பை ஏற்படுத்தியது, அது ஒரு பெரிய பெருநகரத்தை அழித்திருக்கும். ஆனால் அது ஒரு காட்டில் வீழ்ந்தது. இதனால் 80 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை தரைமட்டமாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *