30 ஆண்டுகளாக காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு!

30 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன அமெரிக்கப் பெண், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்
தற்போது 82 வயதான பாட்ரிசியா கோப்தா (Patricia Kopta) என அடையாளம் காணப்பட்ட அப்பெண், கடைசியாக 1992-ல் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் காணப்பட்டார். பின்னர் அவரைக் கண்டுபிடிக்கத் தவறியதால் அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டார்.

அவர் 1999-ல் வடக்கு போர்ட்டோ ரிக்கோவின் தெருக்களில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது கரீபியன் தீவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கிறார் மற்றும் ஒரு சமூக சேவகர் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

பாட்ரிசியா, ஒரு காலத்தில் தனது சொந்த ஊரில் தெருப் பிரசங்கியாக அறியப்பட்டவர், காணாமல் போன காலகட்டத்தின் ஆரம்பத்தில் புவேர்ட்டோ ரிக்கோவில் இருந்தபோது தனது கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்தார்.

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டார்
ஆனால், அவர் டிமென்ஷியாவால் படிப்படியாக பாதிக்கப்பட்டதால், அவர் தனது வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை வெளியிடத் தொடங்கினார்.

இதற்கிடையில், நர்சிங் ஹோமில் உள்ள ஊழியர்கள் பென்சில்வேனியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். டிஎன்ஏ மாதிரிகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த முடிந்தது என்று ரோஸ் டவுன்ஷிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பென்சில்வேனியாவை விட்டுச் செல்வதற்கு முன், அவர் ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia) எனும் ஒருவித மனநோயின் சில அறிகுறிகளைக் காட்டுவதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்கள் அவருக்கு பிரமைகள்’ இருப்பதைக் கண்டறிந்த பிறகு அவர் மருத்துவமனையிலேயே இருக்கும்படி வைத்திருந்தனர்.

இதனால் கவலை கொண்ட பாட்ரிசியா நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாட்ரிசியா குடும்பத்தினர்
அவரது கணவர் பாப் கோப்தா, பாட்ரிசியாவை அவர் காணாமற் போவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், பாப் கோப்தா மறுமணம் செய்து கொள்ளவில்லை.

பாட்ரிசியாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். மற்றோரு தங்கை குளோரியா ஸ்மித், தனது சகோதரி உயிருடன் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *