2035ஆம் ஆண்டுக்குள் உலக மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு!

 

உலக மக்களில் சரி பாதிக்கும் அதிகமானோர் உடற்பருமன் அல்லது கூடுதல் எடை மிக்கவர்களாக இருப்பர் என்று அறிக்கை ஒன்று முன்னுரைத்துள்ளது.

2035ஆம் ஆண்டுக்குள் இந்த பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது. அது 4 பில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமம்.

பிள்ளைகளிடையே உடற்பருமனாக உள்ளோர் விகிதம் அதிகரிப்பதாக உலக உடற்பருமன் சம்மேளனம் குறிப்பிட்டது.

ஏழை நாடுகளிலும் அந்த விகிதம் அதிகரிக்கிறது. நிலைமை கடுமையாவதற்குள் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்தியது.

உடற்பருமனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

2035க்குள் ஆண்டுதோறும் 4 டிரில்லியன் டாலர் இழப்பு நேரிடலாம். எதிர்வரும் ஆண்டுகளில் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில், உடற்பருமன் விகிதம் கணிசமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நிலவரப்படி 2.6 பில்லியன் பேர் உடற்பருமன் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

அது உலக மக்கள்தொகையில் 38 சதவீதமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *