ஜப்பானுக்கு சொந்தமான 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிப்பு!

ஜப்பானின் அதிகாரத்துவத் தீவுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவுள்ளதுடன் தற்போது 6,852 அதிகாரத்துவத் தீவுகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 14,125ஐத் தொடவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகமான மலைகளைக் கொண்ட நாடான ஜப்பானின் நிலப் பரப்பளவு சுமார் 146,000 சதுர மைல்கள். அதைச் சுற்றி பசிபிக் பெருங்கடல்,Okhotsk கடல், ஜப்பானியக் கடல், கிழக்குச் சீனக் கடல் ஆகியவை இருக்கின்றன.

ஜப்பானின் புவியிடத் தகவல் ஆணையம் மேற்கொண்ட புவிசார்ந்த ஆய்வில், ஜப்பானுக்குச் சொந்தமான பகுதிகளில் மேலும் 7,273 தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்குமுன் அத்தகைய ஆய்வு 1987இல் மேற்கோள்ளப்பட்டது.

எப்போதுமே இருந்துவந்துள்ள போதும் இதுவரை கணக்கில் வராத தீவுகளே பெரும்பாலும் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் ஜப்பானியப் பிரதேசத்தில் புதிய தீவுகளும் அவ்வப்போது உருவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *