உலகில் மிகப் பிரமாண்டமான கட்டிடத்தை நிர்மாணிக்கும் சவுதி!

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் “புதிய முராப்பா” என்ற பெயரில் பிரம்மாண்டமான கட்டமைப்பிற்கான திட்டங்களை அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூ முராப்பா

சவுதி அரேபியா அரசாங்கம் நாட்டின் தலைநகர் ரியாத்தின் மையப் பகுதியில் “புதிய முராப்பா”(New Murabba) என்ற பெயரில் பிரம்மாண்டமான புதிய கட்டமைப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான கட்டிடம் தலைநகர் ரியாத்தை அதன் அனைத்து கவர்ச்சிகரமான விஷயங்களிலும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகாப் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட கட்டமைப்பின் பணிகள் 2030ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஃப்யூச்சரிசம் தெரிவித்துள்ளது.

ஒன்பது மில்லியன் மக்களுக்கு எதிர்கால வீட்டை வழங்குவதற்காக 100 மைல் உயரமான கட்டிடத்தை நாடு அறிவித்த ஒரு வருடத்திற்கு பிறகு இது வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

கன சதுர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவை விட 20 மடங்கு அளவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முராப்பா, 25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் எனவும், அதில் 104,000 குடியிருப்பு அலகுகள், 9,000 ஹோட்டல் அறைகள், 980,000 சதுர மீட்டர் சில்லறை இடம், 1.4 மில்லியன் சதுர மீட்டர் அலுவலக இடம், 620,000 சதுர மீட்டர் ஓய்வுநேர சொத்துக்கள், 1.8 மில்லியன் சதுர மீட்டர் சமூக வசதிகள் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.

மேலும் இந்த அமைப்பு சொந்த போக்குவரத்து அமைப்பை கொண்டிருக்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முகாப்(The Mukaab) கட்டமைப்பு அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *