விமான உணவில் ஏற்பட்ட மாற்றம்

உலகின் மிகப்பெரிய விமான உணவு நிறுவனங்களின் உணவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Sats எனப்படும் மிகப்பெரிய விமான சேவையின் உணவில் கோழி இறைச்சியை அடிக்கடி பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க இறால்கள் குறைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Qantas, Cathay Pacific, British Airways, United Airlines உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சேவையாற்றும் Sats குறிப்பிட்ட விமான உணவுகளுக்கு இறாலைச் சேர்க்கும்.

தற்போது கோழி மலிவாக உள்ளதால் இறாலுக்குப் பதிலாக அது பயன்படுத்தப்படுகிறது.

உணவின் விலையை மாற்றாமல் இருப்பதற்கு மாமிசத்தின் அளவைக் குறைக்க அல்லது மாற்று மாமிசத்தைப் பயன்படுத்த விமானச் சேவைகள் விரும்புவதாக Sats குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *