ஜனாதிபதியினால் புதிய தேர்தல் முறைமை அறிவிப்பு!

செயற்பாடுகளுக்காக பாராளுமன்றத்திற்கு வரவில்லை. ஆனால் அதற்கு எதிர்க்கட்சியில் இருந்து சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதுதான் வெளிப்படைத்தன்மை. செலவுகள் மற்றும் ஏனைய விடயங்களைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்.”

என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை அசாதாரணமான பொருளாதார நிலையில் இருக்கிறது என்றும் அதிலிருந்து மீள கடனை மறுசீரமைக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற வேறு துறைகளில் இருந்து அரசாங்கம் சில செலவினங்களைக் குறைக்கவும் பணத்தைத் தேடவும் நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது இலகுவான காரியமல்ல என்றும், ஆனால் யாரேனும் இதைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அதிலிருந்து மீள வேண்டும். இதற்காக கடனை மறுசீரமைக்க வேண்டும். கடனை மறுசீரமைக்க, நாம் செலவுகளைக் குறைக்கவோ அல்லது அதற்கான பணத்தைத் தேடவோ வேண்டும். சில துறைகளில் அவ்வாறு செய்தோம். ஆனால் சில துறைகளுக்கு நாம் பணம் தேட வேண்டும். அதனால்தான் அண்மையில் மின் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது. இப்படிச் செய்தாலும் மின்சார சபை நட்டத்தை எதிர்கொள்கிறது. இதற்கு வேறு வழியில்லை. இல்லாவிட்டால் மின்சாரம் இல்லாமல் வாழ நேரிடும். இந்த சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமானால், சில விடயங்களை விருப்பமின்றி கூட செய்ய வேண்டியிருக்கும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இளைஞர் குழு தனிப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையையை எழுப்பியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓரளவு கல்வி அறிவு இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இதற்கு ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்தார். ஆனால் இது நடைமுறைக்குவர சிறிது காலம் எடுக்கும் என்று குறிப்பிட்டார். அநேகமான இளைஞர்களுக்கு பட்டம் அல்லது வர்த்தக அனுபவம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது வாக்காளர்களின் பணி என்பதை நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“தனிப்பட்ட பொறுப்புக்கூறலில் உங்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கான ஒரு வழி இருக்கிறது. அவர்களில் யாரும் தேவையில்லை என்றால், கட்சிக்கு வாக்களித்து தனக்கு விருப்பமான நபரைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், இந்த செயல்முறைக்கு நிறைய பணம் செலவாகும். எனவே, அதிக செலவு செய்யாமல் சிறந்த தேர்தல் முறையை எப்படி உருவாக்குவது என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான பணம், தனிப்பட்ட வேட்பாளர்களால்தான் செலவிடப்படுகிறது, கட்சிகளால் அல்ல”

என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற அவைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறான செயற்பாடுகள் உகந்ததல்ல எனவும், ஏனைய நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகளை தாம் கண்டுள்ளதாகவும், இது இலங்கைக்கு மாத்திரம் உரித்தானதல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *