இன்று முதல் மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்று (15) பிற்பகல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது..

இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 8 ரூபா கட்டணம் 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 10 ரூபா கட்டணம் 37 ரூபாவாகும் , 61 முதல் 90 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 16 ரூபா கட்டணம் 42 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 வரையிலான அலகுகள் மற்றும் 121 முதல் 180 வரையிலான அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 50 ரூபாய் கட்டணம் போன்று 181 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் அறவிடப்படும் 75 ரூபாய் என்ற தற்போதுள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபா வரையிலும், 31 முதல் 60 அலகுகள் வரை நிலையான கட்டணம் 550 ரூபா வரையிலும், 61 முதல் 90 அலகுகள் வரை நிலையான கட்டணம் 650 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 91 முதல் 120 அலகுகள் வரையிலும், 121 முதல் 180 அலகுகள் வரையிலும், நிலையான கட்டணம் 1500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு முதல் 30 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 8 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாகவும், 31 முதல் 90 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 15 ரூபாய் கட்டணம் 37 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் 32 ரூபாவாக இருந்த கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணமாக இருந்த 90 ரூபா 400 ரூபாயாகவும், 31 முதல் 90 அலகுகளுக்கான நிலையான கட்டணமான 120 ரூபா 550 ரூபாயாகவும், 180 க்கு அதிகமான அலகுகளுக்கான நிலையான கட்டணமாக இருந்த 1500 ரூபா 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறைக்கு, முதல் 300 அலகுகள் பிரிவின் கீழ் ஒரு அலகிற்கு அறவிடப்பட்ட 20 ரூபா கட்டணம் 26 ரூபாவாக மாத்திரமே உயர்த்தப்பட்டுள்ளது.

300 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் 300 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 960 ரூபா என்ற நிலையான கட்டணம் 1200 ரூபாவாகவும் , 300 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு தொழில் துறைக்கும் அறவிடப்பட்ட 1500 ரூபா என்ற நிலையான கட்டணம் 1600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, உணவகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான முதல் 180 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 25 ரூபாய் கட்டணம் 40 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் அறவிடப்பட்ட 32 ரூபாய் என்ற கட்டணம் 47 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, உணவகஙடகளட மற்றும் அரசு நிறுவனங்களுக்கான முதல் 180 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 360 ரூபா என்ற நிலையான கட்டணம் 1000 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் அறவிடப்பட்ட 1500 ரூபா என்ற நிலையான கட்டணம் 1600 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *