திமிங்கிலத்தின் கழிவுகளை தங்கத்திற்கு சமம் என்று கண்டுபிடிப்பு!

Llதிமிங்கிலக் கழிவுகளின் மதிப்பு தங்கத்திற்குச் சமம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நோர்வேயின் கடல்துறை ஆய்வுக் கழகத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தின்போது ஸ்வால்பார்ட் (Svalbard) பகுதியில் தினமும் மிதக்கும் சுமார் 600 டன் திமிங்கிலக் கழிவுகளை ஆராய்ந்தது.

கேட்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் பல்லுயிர்ச் சூழலில் அதன் மதிப்பு தங்கத்திற்குச் சமம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பல்லுயிர்ச் சூழலுக்கு அத்தியாவசியமாகக் கருதப்படும் phytoplankton என்ற நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியை அவை ஊக்குவிப்பதாக அவர்கள் கூறினர்.

வர்த்தகத்திற்காகத் திமிங்கிலத்தை வேட்டையாட அனுமதிக்கும் ஒருசில நாடுகளில் நோர்வேயும் ஒன்றாகும்.

ஆனால் தற்போது உலகிற்குத் திமிங்கிலக் கழிவுகள் அவசியம் என்று அறிவியல் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *