தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *