மொட்டு கட்சி உறுப்பினர்கள் 200 பேர் நீக்கம்!

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதால், ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்பின் போதே, நேற்று (07) பதுளை ரிவர்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கடந்த தேர்தலில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கட்சியின் சிறப்புரிமைகளை பெற்ற பின்னர் ஏனைய கட்சிகளில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள சுமார் 200 உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கடிதங்கள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.