துருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம்!

துருக்கி, சிரியா எல்லையில் இன்று அதிகாலை மற்றும் நன்பகல் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1300க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.