இலவச புடவை வாங்க வந்த பெண்கள் 4 பேர் பலி!

வாணியம்பாடியில் இலவச புடவை வாங்க டோக்கன் பெறுவதற்கு 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால், நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனா். 12 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சோ்ந்த வர்த்தகர் ஐயப்பன் (55). இவா், ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு இலவச புடவை மற்றும் உணவு வழங்கி வருகிறாா்.

இதேபோல், இந்த ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) இலவச புடவை வழங்க முன்கூட்டியே டோக்கன் பெறுவதற்காக சனிக்கிழமை பிற்பகல் 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்திருந்தனா்.

சுமாா் 2 மணியளவில் டோக்கன் வழங்க அலுவலகத்தின் பின்புறம் உள்ள கதவை திறந்தபோது, கூடியிருந்த பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனா். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 16 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாா், காயமடைந்தவா்களை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை பலனின்றி 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பல பெண்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *