மழைப்பொழிவு அளவை மில்லி மீட்டர்களில் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?

மழைமானி என்ற கருவியை பயன்படுத்தி மழையானது மில்லி மீட்டர் என்ற அளவில் அளக்கப்படுகிறது.

மழைமானியின் செயல்பாடு
மழையையோ அல்லது பனியையோ மழைமானி மூலம் அளவிடலாம். அது 100 மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200 மிமீ (8 அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும்.

சாதாரண மழைமானியானது ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளமான உருளைகளையும் ஒரு புனலையும் கொண்டுள்ளது. உட்புற உருளை 0 மிமீ முதல் 25 மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.

உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.

அளவிடும் முறை

பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மழைமானியில் உள்ள நீரின் அளவை மில்லி லிட்டர் அளவில் எடுக்கவேண்டும். இருப்பினும் மில்லி லிட்டர் என்ற அளவை விட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும்.  

உதாரணமாக

10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர்/சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளப்படுகிறது.

ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரின் பரப்பளவு 150 சதுர கிலோமீட்டர் (150 x 10,00,000 சதுர மீட்டர்) என எடுத்துக் கொள்வோம்.

எனவே அந்த ஊரில் 1 mm மழை என்பது 15,00,00,000 லிட்டர் மழை பெய்ததாகக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *