தொழிலதிபரின் மரணத்தில் திடீர் திருப்பம் ஆணுறை கண்டுபிடிப்பு!

பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையாளிகள் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று (01) கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் குளியல் தொட்டியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது நிர்வாணமாக அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது.

இதேவேளை, சடலம் கண்டெடுக்கப்பட்ட குளியல் தொட்டியின் அருகிலும் சில இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், இதன் காரணமாக இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் படி, சந்தேக நபர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் நிர்வாண உடலை இழுத்து குளியல் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பல ஆணுறைகளும் காணப்பட்டதுடன், அவற்றில் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தொழிலதிபர் 50 வயதுடையவர் மற்றும் அவர் திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும், குறித்த வீட்டை திருத்தியமைத்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் திகதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் வெல்லம்பிட்டியில் உள்ள தனது இல்லத்திலிருந்து தனக்குச் சொந்தமான காரில் புறப்பட்டுள்ளார்.

அன்றிரவு 7 மணியளவில் உயிரிழந்த தொழிலதிபரின் சகோதரி பல தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இரவு உணவை தயாரிப்பதற்காக தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக குறித்த நபரின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வர்த்தகர் தனது சகோதரிக்கு 7.29 அளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த அழைப்பின் பின்னர், தனது சகோதரனின் தொலைப்பேசி செயலிழந்துள்ளதாக குறித்த பெண் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்து, அவரை காணவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில், பெலவத்தை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற சகோதரி உட்பட குடும்பத்தின் உறவினர்கள், அங்கு அவரின் சடலம் குளியல் தொட்டியில் மிதப்பதைக் கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கடனட்டைகளை பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியா செல்ல விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி குறித்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், குறித்த வர்த்தகருடன் பெலவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரே வீட்டில் குறித்த பெண் வேறு ஒருவரின் உதவியுடன் இந்தக் கொலையை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படாததால், அருகில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கெமராக்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தொழிலதிபர் தனது வீட்டிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டிற்கு வந்த கார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *