உணவுக் கட்டுப்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். எனினும், உடல் எடையை குறைக்க குறைவாக சாப்பிடுவது தீர்வாகாது.

பலர் டயட்டிங் என்ற பெயரில் தினசரி உணவை வெகுவாக குறைப்பதை நாம் தினமும் காண்கிறோம். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை நாம் குறைக்க வேண்டும் என்பதை இதில் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். குறைவாக சாப்பிடுவதை விட ஆரோக்கியமான உணவை உண்பது நல்லது. எடை இழப்பு என்ற பெயரில் செய்யப்படும் முறையற்ற உணவுக் கட்டுப்பாடு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உணவுக் கட்டுப்பாட்டின் தீமைகள்

உடல் பலவீனம்

உடலுக்குத் தேவையான அளவு உணவை உண்ணாமல் இருந்தால், உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்களைச் செய்வதில் சிரமம் ஏற்படும். ஒல்லியாக இருப்பதற்குப் பதிலாக, உங்கள் உடல் பலவீனமடையத் தொடங்கும். இதன் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

வளர்சிதை மாற்றம் பலவீனமாக இருக்கும்

சரியாக ஆராயாமல், சிந்திக்காமல் டயட் செய்வது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தையும் பலவீனப்படுத்துகிறது. உடல் திறம்பட செயல்பட போதுமான உணவை உட்கொள்ள வேண்டும். மேலும், சீரான இடைவெளியில் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.

செரிமானத்தில் மோசமான விளைவு

உடலுக்கு தேவைப்படும் அளவை விட குறைவான உணவை நீங்கள் சாப்பிட்டால், அது நமது செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உணவுக் கட்டுப்பாடு காரணமாக, உடலில் நார்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், செரிமான அமைப்பும் பலவீனமடைகிறது.

பித்தப்பை கற்கள்

எடை குறைக்கும் செயல்பாட்டில் குறைவாக சாப்பிடத் தொடங்குபவர்களின் உடலில் உள்ள கலோரிகளின் அளவு குறையத் தொடங்குகிறது. அவர்கள் இப்படி நீண்ட நாட்களுக்கு செய்தால், பித்தப்பையின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆகையால் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *