Microsoft நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

Microsoft நிறுவனம் ஆயிரக் கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிடுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழியரணியில் சுமார் 5 சதவீதம் பேர், கிட்டத்தட்ட 11,000 பேரை ஆட்குறைப்புச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் மனிதவளம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் பணிபுரிவோரும் அடங்குவர் என குறிப்பிடப்படுகின்றது.

அதுகுறித்து Microsoft கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. சென்ற ஜூன் மாதத் தகவல்களின்படி, நிறுவனத்தில் 221,000 முழு நேர ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

அவர்களில் 122,000 பேர் அமெரிக்காவிலும் 99,000 மற்ற நாடுகளிலும் பணிபுரிந்தனர். அண்மையில் Amazon, Meta ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டங்களை அறிவித்திருந்தன.

அந்த வரிசையில் Microsoft நிறுவனமும் சேர்ந்திருப்பதால், தொழில்நுட்பத் துறையில் மேலும் அதிகமான ஆட்குறைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *