பட்டம் விடும் விழாவில் மாஞ்சா நூல் அறுத்து 6 பேர் பலி 170 பேர் காயம்!

தமிழ்நாட்டில் தை மாத பொங்கல் பண்டிகையை போலவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதே காலகட்டத்தில் அறுவடை திருநாள் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் சங்கராந்தி, லோஹ்ரி என்ற பெயர்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இந்த உத்தராயண் பண்டிகையில் குஜராத் மக்கள் ஒன்று கூடி பட்டம் விட்டு விளையாடி மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குஜராத் பட்டம் விடும் திருவிழா அந்த மாநில மக்களிடையே மட்டும் இன்று வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து வீடுகளின் மாடிகளிலும், மைதானங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கான பட்டங்களை வானில் பறக்கும் விடும் நிகழ்வை கான பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குஜராத்தில் குவிந்துள்ளனர்.

இந்த கொண்டாட்ட நிகழ்வுக்கு மத்தியில் குஜராத்தில் சோகத்திற்குரிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த திருவிழாவில் பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சாநூல் பலரின் கழுத்து உள்ளிட்ட உடல் பகுதிகளில் அறுத்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஞ்சா நூல் கழுத்து அறுத்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் குழந்தைகள். மேலும், பட்டத்தின் நூலால் ஏற்பட்ட விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த விபத்து சம்பவம் அதிகமாக அகமதாபாத் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *