சக வீரரின் காதலியுடன் ஆபாசமாக உரையாடிய பாகிஸ்தான் அணித்தலைவர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவ்வப்போது பலவித சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் தற்போது பாபர் அசாம் சம்பந்தப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை பற்றவைத்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர்  அசாம், சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமாக உரையாடும் வீடியோ  வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி, தனது சொந்த மண்ணில் அடுத்தடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களை இழந்ததால், சில வீரர்களை அணியில் இருந்து நீக்கவேண்டும் என பலர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். பாபர் அசாமின் கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன.

இந்நிலையில், பாபர் அசாம் குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, பாபர் அசாம் தனது சக வீரரின் காதலியுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்துள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் பாபர் அசாம், ‘‘நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தால், உனது காதலனை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்’’ என பாபர் அசாம் உறுதியளிக்கிறார்.

அது எந்த வீரரின் காதலி எனத் தெரியவில்லை. இந்நிலையில், அந்த வீடியோவில் தோன்றுவது பாபர் அசாம் இல்லை. வேறு ஒருவரின் வீடியோவை போலியாக உருவாக்கி பிரச்னையை கிளப்பியுள்ளனர் என பாபர் அசாமுக்கு ஆதரவாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தினால் மட்டும்தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். பாபர் அசாம் மீது இதுமாதிரியான குற்றச்சாட்டு வருவது இது முதல்முறையல்ல. ஹமிசா முக்தர் என்ற பெண்ணை பாபர் அசாம், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இதற்குமுன் குற்றச்சாட்டு இருந்தது. விசாரணை நடத்திய பிறகு, இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு எனத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

பாபர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வருவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் ஹமிசா முக்தர் என்ற பெண், பாபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அப்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் புகழுக்காக பொய்யான குற்றச்சாட்டை வைத்ததாக அப்பெண் புகாரை திரும்பப்பெற்றார். தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்னை வெடித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *