கொவிட் தடுப்பூசிகளால் மூளை பக்கவாதம் ஏற்படலாம் என அறிவிப்பு!

பைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, ஃபைசர் ஃபயோஎன்டெக் பைவலன்ட் தடுப்பூசியைப் பெற்ற 21 நாட்களுக்கு பின்னர், இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மூளை இஸ்கிமியா என்றும் அழைக்கப்படும் இஸ்கிமிக் பக்கவாதம், மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்துவதனால் இது ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *