“வாரிசு” பட நடிகைக்கு 64 வயதில் ரகசிய திருமணம்?

1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து ‘வாரிசு’ பட விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் ஜெயசுதா வந்திருந்தார். இதனால், தனது 64-வது வயதில் நடிகை ஜெயசுதா ரகசியமாக 3-வது திருமணம் செய்திருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் , தன்னுடன் வருபவர் தனது காதலன் இல்லை என்றும் இவர் என் வாழ்க்கைக் கதையை படமாக்கவுள்ளதால் எனது முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ள சினிமா விழாக்களுக்கு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *