சிங்கக்கொடியை இலங்கையின் தேசியக்கொடியாக அறிமுகம் செய்த முஸ்லிம் தலைவர் 🇱🇰 🇱🇰

சிங்கக் கொடி தேசியக்கொடியாக இருக்கும் காலமெல்லாம் பேசப்படும் முஸ்லிம் தலைவர்

இலங்கையின் தேசியக் கொடியாக சிங்கக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் முதலில் பிரேரணை சமர்ப்பித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் லெப்பை சின்ன லெப்பை ஆவர்.

மட்டக்களப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஹமத் லெப்பை சின்ன லெப்பை 1948 ஜனவரி 16ம் திகதி இந்த யோசனையை சமர்ப்பித்தார்.

கண்டி ராஜ்யத்தின் கடைசி மன்னர் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கவின் சிங்கக்கொடி இலங்கையின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவரது பிரேரணை அமைந்திருந்தது.

தேசியக் கொடி பற்றி ஆராய்வதற்கான ஏழு பேர் அடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் ஜீஜீ பொன்னம்பலம், எஸ் நடேசன் ஆகிய இரண்டு தமிழர்களும், ரி.பி ஜாயா என்ற முஸ்லிமும் இடம்பெற்றிருந்தார்கள்.

1951மார்ச் 02ல் தேசியக் கொடியில் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த பிரேரணையை தயாரித்தவர் அன்றைய களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் JRஜயவர்தன ஆவார்

அஹமத் சின்ன லெப்பை , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ரிஸ்வி சின்ன லெப்பையின் பாட்டனாராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *