சிறுவர்களுக்கு தலா 500 ரூபாவை வழங்கி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் கைது!

ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறித்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வைத்து கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் இல்லத்தின் வயது வந்தவர்களால் குறித்த தேரருக்கு தகாத நடவடிக்கைகளுக்கு இருவர் வழங்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை வழங்கும் வயது வந்தவர்களுக்கு தலா 1000 ரூபாவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு தலா 500 ரூபாவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சிறுவர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்காக தமது விகாரைக்கு வழங்கிய வயது வந்த சிறுவர்களுக்கு நவீன கையடக்கத் தொலைபேசிகளை தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *