குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை சுட்டுக் கொன்ற பின் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

அமெரிக்காவின்  Utah மாநிலத்தில் நபர் ஒருவர் தமது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுடப்பட்டவர்களில் ஐவர் பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Utah சிறுநகரமான இனோக்கில் (Enoch) அதிகாரிகள் 8 பேரின் சடலங்களைக் கண்டுபிடித்தனர்.

இறந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு 4 வயதாகின்றது. அவர்கள் அனைவர் மீதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 42 வயது  Michael Haight என அதிகாரிகள் அடையாளம் கூறினர்.

அவர் சுட்டுக்கொன்றவர்கள் அனைவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள். மனைவி, அம்மா, 5 பிள்ளைகள் அதில் அடங்குவர். பொலிஸார் விசாரணைகளை நடந்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *