வரலாற்றில் குறைந்த எண்ணிக்கையில் கலண்டர்கள் அச்சிடப்பட்ட ஆண்டு!

முன்னைய ஆண்டுகளில், டயரிகள் மற்றும் கலண்டர்கள் வெவ்வேறான வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு அதிக ஓடர் பெறப்பட்டது, தற்போது நாட்டில் காகிதத் தட்டுப்பாடு மற்றும் அச்சிடப் பயன்படுத்தப்படும் மைகளின் விலை அதிகரிப்பாலும் கலண்டர்கள், டயரிகளை அச்சிடுவதற்கான ஓர்டர்களை வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் வழங்கவில்லை. இந்த செலவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் மின் கட்டணம் அதிகரிப்பால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கலண்டர் அச்சடிக்க அதிக செலவாகிறது, அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான டயரிகள், கலண்டர்களை அச்சடிக்க ஓர்டர் கொடுத்த வணிக நிறுவனத்தினர் டயரிகள் மற்றும் காலண்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்துள்ளனர்.

மேலும் மற்ற ஆண்டுகளில், நாட்டில் உள்ள பல்வேறு பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் மாதாந்தம் 12 பக்கங்களில் அச்சிடும் நாட்காட்டியை ஆறு பக்கங்களாக மட்டுப்படுத்தியுள்ளன.

பொது மற்றும் தனியார் வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச கலண்டர்களை வழங்குகின்றன, மேலும் சில வங்கிகள் 2023 ஆம் ஆண்டிற்கான கலண்டரை தயாரித்து சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நாட்காட்டியை அனுப்பியுள்ளன.

இதேவேளை தற்போது அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் காலண்டர்கள் மற்ற ஆண்டுகளைப் போல மிகவும் கவர்ச்சிகரமான முறையில் அச்சிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *