மூன்று மனைவிகளை திருமணம் செய்து காதல் நாயகனாக இருந்த பீலே!

மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே தனது வாழ்நாளில் மூன்று திருமணம் செய்து காதல் நாயகனாகவும் இருந்திருக்கிறார்.
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காதல் நாயகன்
கால்பந்தில் மன்னனாக விளங்கிய பீலே தனது சொந்த வாழ்வில் காதல் நாயகனாக இருந்துள்ளார். தனது வீட்டு பணிப்பெண் முதல் பத்திரிகையாளர், தொலைக்காட்சி பிரபலம், மருத்துவர் என ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஆறு பெண்களை பீலே காதலித்துள்ளார். அவர்களில் மூவரை அவர் திருமணம் செய்துள்ளார்.
1964ஆம் ஆண்டில் பணிப்பெண்ணான அனிசியா மச்சாடோவுடன் ஒன்றாக வாழ்ந்துள்ளார் பீலே. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தும், காதல் வாழ்க்கை குறித்து வெளியுலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் பீலே தன் காதலியை விட்டு பிரிந்தார்.
பின்னாளில் அவருடைய மகள் வளர்த்து தனது தந்தை பீலே தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றம் வரை சென்று போராடினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு பீலே தன் முதல் காதல் மற்றும் மகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.
முதல் திருமணம்
1966ஆம் ஆண்டு ரோஸ்மேரியை திருமணம் செய்த பீலே, அவருடன் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார். பத்திரிகையாளர் லெனிடா கர்ட்ஸ் ஏற்கனவே திருமணமான பீலேவை காதலித்தார்.
ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் சந்தித்துக்கொண்ட இருவருக்கும் 1968யில் ஃபிளாவியா என்ற மகள் பிறந்தார். லெனிடாவைத் தொடர்ந்து ஷூக்யா மெனேகல் என்ற பெண்ணுடன் பீலே திருமணம் தாண்டிய உறவில் இருந்தார். பிரேசிலிய தொலைக்காட்சி பிரபலமான ஷூக்யாவுடன் சில ஆண்டுகள் பீலே வாழ்ந்தார்.

இரண்டாவது திருமணம்
அசிரியா நாசிமென்டோ என்பவரை பீலே இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செலஸ்டி மற்றும் ஜோஸுவா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. 1994ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அசிரியாவுடன் சேர்ந்து வாழ்ந்தார் பீலே.

மூன்றாவது திருமணம்
அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸில் பீலே வசித்து வந்தபோது மார்சியா சிபெலே அயோகியை சந்தித்தார். தன்னை விட 32 வயது சிபெலேவை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார் பீலே. சிபெலே அவரது மூன்றாவது மனைவி ஆவார்.
