உலகப் புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம்!

புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் பீலே (82) நேற்றிரவு காலமானார். கால்பந்து வீரர்  பீலேவுக்கு பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது  கண்டறியப்பட்டு  கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் பீலேவின் உடல்நிலை தொடர்ந்து மோசடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு உடல் நிலை பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பீலே நேற்றிரவு காலமானார். சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வென்று 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கோப்பையை கைப்பற்றியதற்கு அர்ஜென்டினா அணிக்கு அவர்  வாழ்த்து கூறினார்.

பீலே கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்றும், பிரேசில் 3 முறை உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்ததில் பீலே முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பீலேவின்  மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *