இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.