மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதால் 2.2 பில்லியன் மக்களுக்கு கண் பார்வை பாதிப்பு!

காலத்திற்கேற்ப தொழில்நுட்பம் மாறி இன்று நமது இன்றியமையாத தேவையாகவும் மாறிவிட்டது. இன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது என்பது எவருக்கும் கடினம். கல்வி முதல் பெரிய வணிகம் வரை அனைத்தும் இந்த கேட்ஜெட்கள் மூலமாகவே நடைபெறுகிறது. ஒருபுறம், இந்த கேஜெட்களின் முக்கிய பங்களிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய அம்சமாக உள்ளது என்றாலும், மறுபுறம், பல பக்க விளைவுகளும் உள்ளன.

உண்மையில், மடிக்கணினி, கணினி மற்றும் மொபைல் ஃபோனில் மணிக்கணக்கில் செலவிடுவதால், கண்கள் பல வகையில் பாதிக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2021 அறிக்கையில், உலகளவில் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கிட்டப்பார்வை அல்லது தூர பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. நீண்ட திரை நேரம் காரணமாக, மக்கள் தலைவலி, மங்கலான பார்வை, வாந்தி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக திரையில் இருப்பவர்களின் கண் அமைப்பு மாறத் தொடங்குகிறது என்றும், கண் இமைகளின் நீளம் அதிகரிக்கிறது எனவும் கூறும் கண் மருத்துவர்கள், இதனால் கிட்டப்பார்வை ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என தெரிவிக்கின்றனர். உலகளாவிய தொற்றுநோயான கொரோனாவுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டப்பார்வையில், அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தோன்றும் ஆனால் தொலைதூரப் பொருள்கள் மங்கலாகத் தோன்றும். எனினும் 18 வயதிற்குப் பிறகு குழந்தைகளின் கண்பார்வை சீராகும் என்று நம்பப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, 20 முதல் 25 வயது வரை, கண்பார்வை சீராக இருக்க, கண்ணாடி அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றுநோய்களில் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக ஏற்கனவே கண்ணாடி அணிந்த குழந்தைகளின் கண்களைப் பார்க்கும் திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தை நீண்ட நேரம் பார்க்கும் போது கண்களை ஒன்றோடொன்று நெருங்கிச் செல்லும் தசைகள் பாதிக்கப்பட்டு, ​​தலைவலி, மங்கலான பார்வை மற்றும் சில சமயங்களில் கவனம் சிதறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு நபர் தொடர்ந்து பல மணிநேரம் திரையைப் பார்க்கும்போது, ​​​​கண்கள் இமைக்கும் வீதமும் குறைகிறது. இதன் காரணமாக, கண்களில் வலி, வறட்சி மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை அவற்றில் வருகின்றன.

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரே வழி திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதுதான். ஒருவர் நீண்ட நேரம் திரைக்கு முன்னால் வேலை செய்ய வேண்டியிருந்தால், சில விஷயங்களை மனதில் வைத்து கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்  என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சமூக ஊடகத்தை அதிகம் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் மணிக்கணக்கில் வேலை செய்துவிட்டு, சமூக ஊடகங்களிலும் நீண்ட நேரம் செலவிடும் பழக்கத்தை மாற்றிக் கொண்டு, அதிக நேரம் திரையில் செலவிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

நீங்கள் திரையில் மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், பெரிய திரையில் வேலை செய்ய முயற்சிக்கவும். மொபைல் அல்லது மடிக்கணினிக்குப் பதிலாக டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தவும். சிறிய திரையில் பார்க்கும் போது கண்களுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம் குறைவாக இருப்பதால், கண்களில் சிரமம் ஏற்பட்டு, பிரச்சனை அதிகரிக்கும். நீங்கள் விரும்பினால், திரையில் வேலை செய்யும் போது, ​​அதன் அளவையும் எழுத்துருக்களையும் அதிகரிக்கலாம், இதனால் நீங்கள் பார்ப்பதில் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

கணினியில் வேலை செய்யும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகளுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.  ஓய்வு எடுக்கும் நேரத்தில் ​​குறைந்தது 6 மீட்டர் மற்றும் அரை நிமிடம் திரையில் இருந்து விலகி இருக்க வேண்டும். அமெரிக்கன் ஆப்டோமெட்ரிக் அசோசியேஷன் 20/20/20 விதியையும் பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் திரையில் இருந்து ஓய்வு எடுத்து 20 அடி தொலைவில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் கவனம் செலுத்துங்கள். அந்த  இடத்தின் மீது 20 வினாடிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறையும். அதே நேரத்தில், சிறிய குழந்தைகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10 நிமிடங்கள் திரையில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் வறட்சி ஏற்படும். அதனால்தான் கண்களில் வறட்சியை போக்கும் கண் சொட்டுகளைப் பயன்படுத்துங்கள்.  எனினும் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே இதனை பயன்படுத்த வேண்டும்

கண்களின் வறட்சிக்கு சொட்டு மருந்து எடுக்க விரும்பவில்லை என்றால், கண் சிமிட்டும் பயிற்சியை செய்யலாம். நீங்கள் திரையில் மணிக்கணக்கில் வேலை செய்யும் போது, ​​நீங்கள் கண் சிமிட்ட மறந்து விடுவீர்கள். இதனால் கண்கள் வறண்டு போகத் தொடங்குகிறது. 1 முதல் 2 மணி நேரம் கழித்து திரையில் இருந்து ஓய்வு எடுத்து, தொடர்ந்து 10 முதல் 15 முறை கண்களைத் திறந்து மூடவும். அது தவிர இடை இடயே கண்களை சிமிட்டுவதும் நல்ல பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *