அதிகரித்த குடும்ப வன்முறையால் கொல்லப்படும் மனைவிகள்!

பிரான்ஸில் குடும்பவ வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிரபங்கள் தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறை காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 208,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகமாகும்.

ஆண்கள் பெண்கள் என மொத்தம் 208,000 பேர் கடந்த ஆண்டில் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.  

பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரு சதவீதமானோர் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

251 தடவைகள் கணவன் அல்லது மனைவில் கொல்லப்படுவதற்கு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. 122 பெண்கள் கடந்த வருடத்தில் குடும்ப வன்முறை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *