சீனாவில் 2 கோடி இளைஞர்கள் வேலையின்றி திண்டாட்டம்
சீனாவில் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், முடக்க நிலை போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சுமார் 1 கோடி பேர் பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.