தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள புடினுக்கு திகதி குறித்த மருத்துவர்கள்!

விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதியாக பொறுப்பில் இருப்பது இதுதான் இறுதி ஆண்டு எனவும், எந்த மருந்தும் கடைசி வரையில் பலனை அளிக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிர சிகிச்சையில் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிக்கு மேற்கத்திய நாடுகளின் சிறப்பு மருத்துவர்கள் குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு மருந்துகளால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் தொடர்பான போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதித்திருந்தும், ரகசியமாக அவர் வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையை நாடியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் விளாடிமிர் புடினுக்கு தற்போது உலகின் சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவே அவரது கடைசி கட்டம் எனவும், ஆட்சிப்பொறுப்பில் இருந்து மிக விரைவில் அவர் வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் இதுவரை அறிமுகமாகாத சிறப்பு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக கூறும் மருத்துவர் ஒருவர், உண்மையில் அந்த சிகிச்சையால் மட்டுமே புடின் தற்போது பொதுவாழ்க்கையில் நீடித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

எந்த மருந்தும் பலன் தராது
இறுதிகட்டம் நெருங்கிவருவதை உணர்ந்த பின்னரும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தாலும், கடைசி வரையில் எந்த மருந்தும் பலன் தராது என்றே அவர் கூறுகிறார்.

புடின் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து வெளியேற முடிவு செய்தால், தற்போதைய வேளாண் அமைச்சர் Dmitry Patrushev இடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என்றே கூறப்படுகிறது. இன்னொருவர், தனது முன்னாள் பாதுகாவலரான 50 வயது Alexei Dyumin என்பவரும் பட்டியலில் இருக்கிறார் என கூறுகின்றனர்.

முன்னதாக, இஸ்ரேல் மருத்துவர்களின் கண்காணிப்பில், உயிர் காக்கும் சிகிச்சையில் புடின் உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் இஸ்ரேல் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வெளிநாட்டு மருத்துவர்கள் என்றே கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *