நாளை பூமியை நெருங்கி வரும் மூன்று விண்கற்களால் காத்திருக்கும் ஆபத்து?

கிறிஸ்மஸ் தினமான நாளை பூமியை நோக்கி மிக வேகமாக மூன்று பெரிய விண்கற்கள் நெருங்கி வரும் என்று விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2022 YL1 , 2022 YA14, 2022 TE14 என்று மூன்று விண்கற்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது, இதில் முதல் விண்கல் போயிங் 777 இன் இறக்கைகளின் அகலம் கொண்டது என்றும், இரண்டாவது விண்கல் கால்பந்து மைதானத்தின் நீளம் கொண்டது என்றும், மூன்றாவது விண்கல் தோராயமாக 50-அடுக்குமாடி கட்டிடத்தின் அளவு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்பேஸ்கார்டு மைய கண்காணிப்பு இயக்குனரான ஜே டேட், “மிக எளிதாக தொந்தரவு அடையக்கூடிய இந்த மூன்று விண்கற்களும்”, நாளை பூமியுடன் நெருங்கிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவற்றில் மிகப்பெரிய விண்கல்லான 2022 TE14  312 முதல் 689 அடி விட்டம் வரை இருக்கலாம் என்று அளவிடப்பட்டுள்ளது.இந்த மூன்று விண்கற்களில் ஒவ்வொன்றும் பூமியின் நெருங்கிய பாதையில் தங்கள் வழிகளை அமைத்துள்ளன.இருப்பினும் இவை உலகளாவிய அடிப்படையில் கவலைப்பட வேண்டிய அளவீடு இல்லை, பூமிக்கும் விண்கல்லிற்கும் இடையே மில்லியன் கணக்கான மைல்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2022 YL1 பூமியிலிருந்து 1.82 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும், இருப்பினும் இது உலகளாவிய அளவில் பூமிக்கு மிக அருகில் இருப்பதாக கருதப்படுகிறது.மற்ற இரண்டு விண்கற்களும் ஆபத்தானவையாக கருதப்படுகிறது. விண்வெளி நிபுணர் பால் சோடாஸ்,  2022 TE14 விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *