உலகின் முதல் ரோபோட் கோப்பி கடை திறக்கப்படுகிறது!

டுபாயில் மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ரோபோட் கோப்பி கடை திறக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் உலகில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் மனிதர்களின் தேவையே இனி தேவைப்படாது என்பது போல் பல அற்புத நிகழ்வுகள் அங்கங்கு நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. 

அந்தவகையில் உலகின் முதல் சூப்பர் மோடல் ரோபோட் கோப்பி கடை, டுபாயில் டோனா சைபர்-கஃபேவால் திறக்கப்பட இருக்கிறது.

மனிதர்களே இல்லாமல் இயங்கும் இந்த ரோபோட் கோப்பி கடை உலகிலேயே முதன் முறையாக திறக்கப்படும் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த ஆண்டு ரோபோட் கோப்பி கடை திறக்கப்பட இருக்கிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில், சூப்பர் மோடல் ரோபோட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய டோனா சைபர்-கஃபே முடிவு செய்துள்ளது.

மேலும் சுயசேவை மூலம் வழங்கப்படும் ஐஸ் கிரீம் மெஷின்கள் மற்றும் ரோபோட் கைகளில் வழங்கப்படும் கோப்பி என அதிநவீன அம்சங்கள் காபி ஷாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த சூப்பர் மோடல் ரோபோட்களின் உதிரிபாகங்கள் ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும், அதற்கு ரோபோட் – C2 என பெயர் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ரோபோட் பெண் வடிவத்தில் மனித உருவம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் வாடிக்கையாளர்களை நினைவில் வைக்கும்படியான நினைவும் கொடுக்கப்பட்டு, உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் படியான இந்த ரோபோட் கதைகளையும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *