உலக மக்கள் நேற்றிரவு கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பயனர்களின் டிராபிக் அதிகமாக இருந்ததாகவும், அனைத்தும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை தொடர்பானது என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கத்தாரின் லுசைல் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்ற கால்பந்து  உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல், இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க, கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

வெற்றியாளரை தீர்மானிக்க போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கியும் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு கோப்பைக்காக போராட, இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.இதையடுத்து பெனால்டி கிக் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில், அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

கத்தார் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜெண்டினாவின் அணியின் வெற்றியை அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள அர்ஜென்டினா அணியின் ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *