Nestlé lankaவின் தர முகாமைத்துவத்துக்கு விருது!
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் சிறந்த தர முகாமைத்துவத்திற்காக இலங்கை தேசிய தர விருதுவழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் 90 வீதத்துக்கும் அதிகமான தயாரிப்புகள் குருநாகலில் உள்ள அதன் அதிநவீன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
‘நல்லுணவு, நல்வாழ்வு’ நிறுவனம், உற்பத்தி (பாரிய) பிரிவில் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
‘எமது கடுமையான தர நியமங்களுக்காக தேசிய தர நிர்ணய சபையினால் எமக்கு வழங்கப்பட்ட இந்த விருதால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். நெஸ்லே நிறுவனத்தில் நாங்கள் முன்னெடுக்கின்ற அனைத்திலும் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பன அத்திவாரமாக காணப்படுகின்றன.
எனவே, இந்த அங்கீகாரம் இந்த இலக்கை நோக்கிய நமது உறுதியான அர்ப்பணிப்பைக் காண்பிப்பதுடன், அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், எங்கள் அன்பிற்குரிய நுகர்வோருக்கு தரத்தின் உத்தரவாதத்தையும் இது வழங்குகிறது. என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ஜேசன் அவன்சென்யா அவர்கள் குறிப்பிட்டார்.