BOI உடன் Airtel முதலீடு!

Airtel Sri Lanka, இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) மற்றொரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு நாணய முதலீடுகள்  தேசிய தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வலைப்பின்னல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், எயார்டெல் தனது அண்மைய கால முதலீடுகளை அதன் வலைப்பின்னல் விஸ்தரிப்பு மேம்பாடுகளை நோக்கி மேற்கொண்டு மேலும் குறிப்பிடத்தக்க மென்பொருள் மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்தி, நாடு முழுவதும் 2G மற்றும் 4G சேவைகளை வலுப்படுத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு இலங்கைக்குள் பிரவேசித்ததிலிருந்து, எயார்டெல் தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த வலையமைப்பை உருவாக்க முதலீடு செய்து வருகிறது. இன்று, இந்த முயற்சிகளின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களை தன்வசப்படுத்திக்கொள்வதற்கும், 2,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கி , மேலும் 65,000 இலங்கையர்களுக்கு எங்கள் விரிவான விநியோக வலையமைப்பின் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கு வழியமைத்துள்ளோம்.

“குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நேரடி முதலீடும் இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இலங்கை மக்களின் மீள்தன்மை மற்றும் பரந்த ஆற்றல்கள் மீதான எயார்டெல்லின் தொடர்ச்சியான நம்பிக்கையை எங்களின் முதலீடு வெளிப்படுத்துகிறது.” என Airtel Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *