தவறுதலாக வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட 4.6 கோடி ரூபா பணத்தை செலவு செய்த நபருக்கு சிறை!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் கோரே மற்றும் தாரா தோர்ன். இவர்கள் சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க நினைத்தனர். இந்நிலையில் புரோக்கர் ஆதம் மாக்ரோ மூலம் ஒரு வீடு ஒன்று விலைக்கு வந்தது. அதற்கான தொகை (இந்திய ரூபாய்) ரூ.4.6 கோடியை அனுப்புமாறு புரோக்கரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த தம்பதியினருக்கு தகவல் வந்தது. அதன்படி பணத்தை அனுப்பினர்.

ஆனால் புரோக்கரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஏமாற்றப்பட்டது தெரிந்து போலீசில் தம்பதியினர் புகார் அளித்தனர். விசாரணையில் அப்துல் காதியா (24) என்பவர், ஆதம் மாக்ரோவின் மின்னஞ்சலை ஹேக் செய்து, பணம் பெற்றது தெரிந்தது. ‘என் வங்கி கணக்கில் ரூ.4.6 கோடி வரவாகி இருந்தது. அதன் மூலம் தங்கம் வாங்க விரும்பினேன். அந்த பணம் தற்செயலாக எனது கணக்கில் வரவாகி இருந்தது. நான் யாரையும் மோசடி செய்யவில்லை’ என்று போலீசாரிடம் அப்துல் காதியா தெரிவித்தார்.

புரோக்கரின் மின்னஞ்சலை அப்துல் காதியாதான் ஹேக் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனினும், தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணம் பற்றி வங்கியிடம் தகவல் தெரிவிக்காமல் செலவழித்தது குற்றம் என்று கூறிய ஆஸ்திரேலிய நீதிமன்றம், அப்துல் காதியாவுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *