சிகரெட் விற்பனை முடிவுக்கு வருகிறது!

நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் முழு புகையிலைக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இதன்படி, 2008ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவரும் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்க முடியாது என்று செவ்வாய்கிழமையன்று அந்நாட்டு நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை வாங்கக்கூடியவர்களின் எண்ணிக்கை குறையும். உதாரணமாக, 2050ல், 40 வயது நிரம்பியவர்கள் சிகரெட் வாங்க முடியாத அளவுக்கு இளமையாக இருப்பார்கள்.

குறித்த மசோதாவை அறிமுகம் செய்த சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால், இது புகையில்லா எதிர்காலத்தை நோக்கிய ஒரு படியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், ஆரோக்கியமாக வாழ்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் புகைபிடிக்கும் வீதம் ஏற்கனவே குறைந்த நிலையில் உள்ளது, நவம்பரில் வெளியிடப்பட்ட அரசாங்கப் புள்ளிவிவரத்தின்படி, வயது வந்தவர்களில் வெறும் 8 வீதம் பேர் தினசரி புகைபிடிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு 9.4 வீதமாக இது காணப்பட்டது. 

2025 ஆம் ஆண்டளவில் புகையற்ற சூழல் மசோதா அந்த எண்ணிக்கையை 5 வீமாக குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

இறுதியில் இந்த நடைமுறையை முற்றிலுமாக இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடிய சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை நாடு முழுவதும் 600 ஆகக் குறைக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *