உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் வெளியீடு!

உலக நாடுகளில் வலிமையான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில்  ஜெர்மனி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Global Passport Power Rank 2022 தரவிற்கமைய, உலகின் வலிமையான மற்றும் பலவீனமான கடவுசீட்டு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

கடவுசீட்டு தரவரிசை விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குள் நுழையலாம் என்று தெரிவிக்கிறது. இது நாட்டிற்கு நாடு மாறுபடும் மற்றும் பல பொருளாதார மற்றும் பிற காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் கடவுசீட்டு தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டாகக் கருதப்படுகிறது. இந்த கடவுசீட்டு மூலம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இராண்டாவது இடத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி,  நெதர்லாந்து, ஒஸ்ரியா, சுவிட்சர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின்மூலம் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

மூன்றாவது இடத்தில் டென்மார்க், பெல்ஜியம், போர்ச்சுகல், நோர்வே, போலந்து, நியூசிலாந்து அமெரிக்கா, அயர்லாந்து,  நாடுகள் இடம்பிடித்துள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின் மூலம் 172 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

பிரித்தானியா இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளதுடன் பிரித்தானிய கடவுசீட்டை கொண்டு 171 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 69வது இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டுடன், சுமார் 72 நாடுகளுக்குள் நுழைய விசா பெற வேண்டிய அவசியமில்லை. 

அதேபோல், இலங்கையின் கடவுச்சீட்டு 86வது இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டுடன் 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *