மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை!
இலங்கையில் அடுத்த ஆண்டு மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களில் நீர் பற்றாக்குறை, நிலக்கரி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வருடம் மின்சாரம் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது எழுபது சதவீத மின்சாரம் நீரிலிருந்து பெறப்படுகின்றது.
இதனால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நீர்மட்டம் குறைவடையும். இந்நிலையில் நிலக்கரி, எரிபொருளை பெற டொலர் பற்றாக்குறை பிரச்சினையும் உள்ளது. இதனால் தொடர்ந்து மின்சாரத்தை வழங்க முடியாது. – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.