மனைவி உயிரிழக்கும் முன் உயிரிழந்த கணவன்!

அமெரிக்காவில் மனைவி உயிரிழக்கப்போகும் துக்கம் தாங்காமல், சில மணி நேரம் முன்னர் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த தம்பதி ஹியுபெர்ட் மாலிகோட் மற்றும் ஜூன். இவர்கள் இருவரும் 100 வயதை எட்டியவர்கள்.

இவர்களுக்கு திருமணமாகி 79 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த சமயம் அது. ஹியூபெர்ட் தன் மனைவி ஜூனை முதன் முதலில் ஹாமில்டன் நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் தான் சந்தித்தார்.

அப்போது ஹூபர்ட் கடற்படையில் பணியாற்றிவந்தார். ஜூன் டார்பிடோ பாகங்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றினார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் 1943 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இந்த தம்பதி தங்களது 79வது திருமண நாளையும், ஜூலை மாதம் இருவரும் தங்களது 100வது பிறந்த நாளையும் கொண்டாடினர்.

ஆனால், இது தான் அவர்களின் கடைசி திருமண நாளாக அமையும் என அவர்கள் நினைத்து பார்க்கவில்லை.

ஜூன் இதய நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைய முடியாத நிலையில் மருத்துவமனையில் சிகிக்கை பெற்றுவந்தார். இந்நிலையில், டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி மாலை ஜூனின் உயிர் பிரிந்தது.

ஜூன் மருத்துவமனையில் இருந்தபோது அவரது கணவர் தான் உடனிருந்து மனைவியை கவனித்துக்கொண்டுள்ளார். தன் மனைவி தன்னை விட்டு பிரியும் நாள் வெகு தொலைவில் இல்லை என உணர்ந்த ஹியூபெர்ட், ஜூன் இறப்பதற்கு 20 மணி நேரம் முன்னர் தனது உயிரைவிட்டார்.

நவம்பர் மாதம் 30 ஆம் தேதி ஹியூபெர்ட் உயிரிழந்த நிலையில், ஜூன் மறுநாள், டிசம்பர் 1 ஆம் தேதி உயிரிழந்தார்.

மனைவியின் நிலையை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஹியூபெர்ட்டின் உடல்நலம் மோசமடையத் தொடங்கியதாக அவர்களது மகள் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகள் இணைப்பிரியாமல் வாழ்ந்த இந்த ஜோடி, தங்கள் வாழ்வின் கடைசி பயணத்தையும் ஒன்றாகவே மேற்கொள்ள நினைத்தனர்.

இதனாலேயே ஜூன் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் தன் உயிரை விட்டார் ஹியூபெர்ட். மறு நாளே மனைவியும் அவரை சென்றடைந்தார்.

இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *