இலங்கையில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7 பண்ணையாளர்களின் 60 கால்நடைகள் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்நகர், நாகேந்திரபுரம், புண்ணை நீராவி , பூநகரி, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் 20 பண்ணையாளர்களுக்கு சொந்தமான 45 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கிளிநொச்சி புளியம்பொக்கனை கண்டாவளை , கல்மடு , மயில்வாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருகோணமலை தோப்பூரிலும் 15 பண்ணையாளர்களின் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, கால்நடைகளின் உயிரிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழுவொன்று சம்பவ இடங்களுக்கு செல்லவுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று மாலை வரையில் பதிவாகியுள்ளது. எனினும் இன்று காலை வரையான எண்ணிக்கையை பார்க்கும் போது உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதென கூறப்படுகின்றது.