தபால் விநியோகப் பணியில் பணியாற்றும் பிரபல கால்பந்து வீரர்!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து தேசிய அணியின் முக்கிய வீரருமான நீல் வெப் என்பவரே தற்போது தபால் விநியோகிக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி வருபவர்.

தபால் விநியோகிப்பவராக
ஆட்டக்களத்தில் மிட்ஃபீல்டராக பிரகாசித்தவர் என்பதாலையே, அவர் தபால் விநியோகிப்பவராக பணியாற்றுவதில் எவரும் வியப்படையவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நான்கு சீசன்களில் விளையாடிய வெப்,

பிரீமியர் லீக், FA கோப்பை, இரண்டு லீக் கோப்பைகள் மற்றும் UEFA சூப்பர் கோப்பையை வென்றார். மட்டுமின்றி, தேசிய கால்பந்து அணிக்காக 28 முறை களமிறங்கினார். 1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரை இறுதி வரையில் முன்னேறிய இங்கிலாந்து அணியில் வெப் இடம்பெற்றிருந்தார்.

வாரம் 220 பவுண்டுகள் ஊதியம்
1997ல் கால்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெப், நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் தபால் விநியோகிக்கும் பணியில் இணைந்தார். வாரம் 220 பவுண்டுகள் ஊதியம் ஈட்டும் பணியில் மிகுந்த ஈடுபாடுடன் வெப் பணியாற்றுவதாக கூறுகின்றனர்.

தபால் விநியோகிக்க செல்லும் வீடுகளில், அடையாளம் காணும் மக்கள் தேநீர் அளித்து உபசரிப்பதாகவும் வெப் நெகிழ்ந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *